தொழில்நுட்பம்

வாய பொளக்குற விலைக்கு புதிய சாம்சங் OLED டிவி.! சிறப்பு என்ன…?

Published by
கெளதம்

உங்க வீட்டில் புதிய டிவி வாங்கணும் வெய்டிங்கா? அப்போ ஒரு அதிரடியான டிவி உங்களுக்காக காத்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய OLED டிவிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அண்ட் புதிய சாம்சங் ‘OLED TV’ அனைத்து மாடல்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

Samsung OLED TV [Image- FoneArena]

ஓஎல்இடி OLED ஸ்மார்ட் டிவிகளின் வரம்பை விரிவுபடுத்துவதும் நோக்கத்தில், எஸ்95சி (S95C) மற்றும் எஸ்90சி (S90C) ஆகிய இரண்டு சீரீஸின் கீழ், வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளில் அறிமுக செய்யப்பட்டுள்ளது.

இதன் விலை ஷாக் கொடுக்கற அளவுக்கு தான் இருக்கிறது. இதன் விலை ரூ.1,69,990 முதல் தொடங்குகிறது. அந்த அளவுக்கு என்ன சிறப்பு என்பதை இதில் பார்க்கலாம்.

Samsung OLED TV [Image- FoneArena]

என்னென்ன அளவுகள் எங்கு வாங்கலாம்:

சாம்சங் ஓஎல்இடி (OLED) ஸ்மார்ட் டிவி S95C மற்றும் S90C. இரண்டு சீரிஸில் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அதாவது, 77-இன்ச், 65-இன்ச் மற்றும் 55-இன்ச் ஆகிய அளவுகளில் கிடைக்கிறது. இந்தத் சீரிஸின் ஆரம்ப விலை ரூ.169,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த டிவிகளை இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்தும், Samsung.com லும் வாங்கலாம்.

Samsung OLED TV [Image- FoneArena]

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. முன்னணி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கினால் 20 சதவீதம் வரை கேஷ்பேக் கிடைக்கிறது. கூடுதலாக, ரூ.2,990 முதல் EMI விருப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து OLED TV மாடல்களும் 2 வருட வாரண்டியுடன் வருகின்றன.

samsung oled tv [Image Source : cenet]
OLED TV-ன் சிறப்பம்சம்:

  • 2,030 பான்டோன் நிறங்கள் மற்றும் 110 ஸ்கின் டோன் ஷேட்களின் துல்லியமான பிரதிநிதித்துவத்துடன், இந்த டிவியில் ஒளிபரப்பாகும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே யதார்த்தமான காட்சி அனுபவத்தை வழங்கும்.
  • இதில், HDR OLED+ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஒவ்வொரு காட்சிகளும் அப்படி ஒரு தனி பீல் கிடைக்குமாம்.
  • நியூரல் குவாண்டம் ப்ராசஸர் 4K வசதியுடன் வருகிறது. இந்த மேம்பட்ட செயலி, AI-அடிப்படையிலான அல்காரிதம்களைப் பயன்படுத்தி, காட்சி மூலம் உள்ளடக்கக் காட்சியை பகுப்பாய்வு செய்கிறது.
  • இந்த மாடலில் வயர்லெஸ் டால்பி அட்மோஸ் மற்றும் OTS+ தொழில்நுட்பம் உள்ளது. இது அதிவேக ஒலி மற்றும் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது.
  • கூடுதலாக, குறைந்தபட்ச விசைகளுடன் சூரிய சக்தியில் இயங்கும் ரிமோட் வசதியும் கிடைக்கிறது.
  • இந்த பேட்டரி இல்லாத ரிமோட்டை வீட்டில் இருக்கும் மின்சார விளக்குகளிருந்து உமிழப்படும் மின்காந்த அலைகளைப் பயன்படுத்தி கூட சார்ஜ் செய்ய முடியும்.
  • 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் கேம் பார், மினி மேப் ஜூம் மற்றும் விர்ச்சுவல் ஏம் பாயிண்ட் போன்ற கூடுதல் அம்சங்களுடன், விளையாட்டாளர்கள் த்ரில்லான மற்றும் அதிவேகமான கேமிங் அனுபவத்தை பெறலாம்.
Published by
கெளதம்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago