OnePlus12 [File Image]
ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் ஆனது கடந்த டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகமானது. இதனையடுத்து இந்த ஸ்மார்ட் போன் எப்பொழுது இந்தியா உட்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்ற கேள்வி அனைத்து வாடிக்கையாளர்கள் இடத்திலும் இருந்தது.
இப்பொழுது அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஒன்பிளஸ் 12 ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி உலகளவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடந்த நெவர் செட்டில் உச்சி மாநாட்டில் (Never Settle Summit) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனுடன் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனும் ஒன்பிளஸ் பட்ஸ் 3-ம் ( OnePlus Buds 3) அறிமுகம் ஆகவுள்ளது.
ஒன்பிளஸ் 12ஆர் கேமர்களை இலக்காகக் கொண்டு அறிமுகம் செய்யப்படலாம், அதோடு மற்ற போன்களை விட குறைவான விலையிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 12 ஆனது தற்போது சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 2K ரெசல்யூஷன், 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சம்ப்ளிங் ரேட் கொண்ட 6.82 இன்ச் டிஸ்பிளே உள்ளது.
அட்ரினோ 750 ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) பொருத்தப்பட்டுள்ளது. ஹாசல்பிளாடிற்கான (Hasselblad) ‘எச்’ பிராண்டிங் மற்றும் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 48 எம்பிஅல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 64 எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. 32 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பேட்டரியைப் பார்க்கையில் யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 100 வாட்ஸ் வயர்டு சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,400 mAh லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. 24 ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் (LPDDR5x) ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…