சீன ஸ்மார்ட்போன் தாயாரிப்பாளாரான ஐக்யூ (iQOO), இந்தியாவில் அதன் புதிய ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே ஐக்யூ 12 நவம்பர் 7ம் தேதி சீனாவில், ஐக்யூ 12 ப்ரோவுடன் இணைந்து வெளியிடப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஐக்யூ 12 உடன் இணைந்து ப்ரோ மாடல் அறிமுகமாகுமா என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மூலம் விற்பனையாகும் என்று ஐக்யூ ஏற்கனேவே தெரிவித்திருந்தது. தற்போது இந்த […]
ஸ்மார்ட்போன் பிரியர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன், அட்டகாசமான அம்சங்களுடன் அனைவருக்கும் வாங்கும் எண்ணத்தை தூண்டும் விலையுடன் இன்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒன்பிளஸ் 12 போன் ஜனவரி 24ம் தேதி இந்தியா உட்பட உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம். இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன என்பதை காணலாம். டிஸ்பிளே இதன் டிஸ்பிளேவைப் பொறுத்தவரை, 3168×1440 பிக்சல்கள் (2K) ஹைரெசல்யூஷன் கொண்ட 6.82 இன்ச் […]
வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு செய்தி அனுப்ப எளிமையாக இருக்கும் வகையில் ‘யுசர் நேம்’ (User Name) என்கிற அம்சத்தை மேம்படுத்தி வருகிறது. இந்த யூசர் நேம் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் மொபைல் நம்பரை மற்றவருக்கு பகிராமல் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பும் அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் உள்ளது. குறிப்பாக இதே போன்று மொபைல் நம்பரை பகிராமல் வீடியோ மற்றும் ஆடியோ கால் செய்யும் அம்சம் எக்ஸ்-ல் (ட்விட்டர்) உள்ளது குறிப்பிடத்தக்கது. […]
நத்திங் டெக்னாலிஜி நிறுவனம் இதுவரை நத்திங் போன் 1 (Nothing Phone 1), நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடல்களும் அதன் ட்ரான்ஸ்பெரென்ட் ஆன பின்புற வடிவமைப்பினால் வாடிக்கையாளர்களிடம் அதிகாமாக பேசப்பட்டதோடு, விற்பனையிலும் பட்டையை கிளப்பியது. இப்போது நத்திங் தனது அடுத்த தயாரிப்பான நத்திங் போன் 2ஏ-வை (Nothing Phone 2a) இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இப்போது நத்திங் […]
90ஸ் கிட்ஸ் களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கேம் என்றால் அது கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ (ஜிடிஏ) என்று சொல்லலாம். 1997 -ல் அறிமுகமான ஜிடிஏ சீரிஸ் அறிமுகமான நாளில் இருந்து பலரையும் கவர்ந்தது. ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இந்த விளையாட்டை விரும்பி விளையாட ஆரம்பித்தனர். ஜிடிஏ வைஸ் சிட்டி, சான் அன்ட்ரஸ் என பல பெயர்களுடன் ஜிடிஏ சீரிஸ் கேம்கள் உள்ளன. இதில் ஜிடிஏ வைஸ் சிட்டியில் 5 கேம்கள் இதுவரை உள்ளன. இப்பொழுது 6 […]
பட்ஜெட் விலையில் 8 ஜிபி ரேம், 6000 mah பேட்டரி மற்றும் 50 எம்பி கேமரா கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக, ஹூவாய் நிறுவனம் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஹூவாய் அறிமுகம் செய்துள்ள என்ஜாய் 70 (Huawei Enjoy 70) என்கிற ஸ்மார்ட்போன் ரூ.17,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் வடிவமைப்பை பொறுத்தவரையில் இதற்கு முன்னதாக வெளியான ஹூவாய் என்ஜாய் பி60 மாடல் போலவே உள்ளது. என்ஜாய் பி60 […]
டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று (டிசம்பர் 4ம் தேதி) இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு மலிவான ஸ்மார்ட்போன் என்பதால் போனின் ஆரம்ப விலை ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. முன்னதாக டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போனை மலேசியாவில் RM 399 (ரூ. 7,200) என்கிற விலையில் அறிமுகம் செய்தது […]
உயர்தர ஸ்மார்ட்வாட்ச் மாற்று வயர்லேஸ் ஏர்பட்ஸ் தயாரிப்பாளரான ஃபயர்-போல்ட் (Fire Blot), புதிய ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன், கடந்த நவம்பர் மாதம் ஃபயர்-போல்ட் லுமோஸ் என்கிற ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,499 க்கு அறிமுகமானது. இப்போது ரைஸ் லக்ஸ் ஸ்மார்ட்வாட்ச்சையும் ரூ.1,499 என்ற விலைக்கே அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியுடன் கூடிய மெட்டல் ஸ்ட்ராப்புடன் வருகிறது. இதனால் ஃபயர்-போல்ட் ரைஸ் லக்ஸ் நிறுவனத்தின் மெட்டல் எடிசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த தயாரிப்பான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இன்று (டிசம்பர் 4ம் தேதி) ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் அம்சங்களை அதிகாரப்பூர்வமாக நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் ஒன்பிளஸ் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் 12 […]
அமாஸ்ஃபிட் (Amazfit) நிறுவனம் அதன் புதிய அமாஸ்ஃபிட் பேலன்ஸ் என்கிற ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வாடிக்கையாளரின் ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, அவர்களின் உடல் மற்றும் இரண்டையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் அம்சங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இதில் ஏஐ ஸ்லீப் மற்றும் ஃபிட்னஸ் கோச்சிங் அம்சம் உள்ளது. அமாஸ்ஃபிட் பேலன்ஸ் ஆனது 480 x 480 பிக்சல்கள் ரெசல்யூஷன், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட […]
108 எம்பி கேமரா, 6000 mAh திறன் கொண்ட பேட்டரி என அசத்தலான அம்சங்களைக் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஹானர் (Honor) நிறுவனம் அமைதியாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஹானரின் மலிவு விலை ஸ்மார்ட்போனான ‘ஹானர் எக்ஸ்7பி’ (Honor X7b) உலக அளவில் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி ‘ஹானர் 90 5ஜி’ போனை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது. அதன்பிறகு அக்டோபர் 18ம் தேதி அதன் பிளே சீரிஸில் புதிய […]
இந்திய தகவல் தொடர்பு துறையான DoT (Department of Telecommunications) போலி சிம்கார்டுகள் மூலமாக நடக்கும் மோசடி குற்றங்களைத் தடுக்கும் வகையில், புதிய சிம் கார்டு விதிமுறைகளை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் சிம் கார்டுகளின் மொத்த விற்பனையைத் தடை செய்தல், பாயின்ட் ஆஃப் சேல் (PoS) உரிமையாளரின் கட்டாயப் பதிவு மற்றும் சிம் கார்டு வாங்கும் நபரின் விவரங்களைப் பதிவு […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி (Redmi), கடந்த நவம்பர் 29ம் தேதி ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் மூன்று வகையான மாடல்கள் அறிமுகமானது. அதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) மாடல்கள் உள்ளன. இவற்றுடன் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது. ரெட்மி கே70 விவரக்குறிப்புகள் டிஸ்பிளே ரெட்மி கே70 போனில் […]
சியோமி நிறுவனம் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆனது. இதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி சியோமி தனது புதிய சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் சீனாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் […]
தனது ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்த நத்திங் டெக்னாலஜி, இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் ஃபோன் 2 -ஐ இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தியது. இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் நத்திங் ஃபோன் 2-ன் விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. ஏனென்றால், நத்திங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் விலையை சுமார் ரூ.5,000 குறைத்துள்ளது. இதனால் நத்திங் ஃபோன் 2 ஸ்மார்ட்போனின் […]
புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனைகளுக்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான போட் (BoAt), ஸ்மார்ட்வாட்ச்களையும் தயாரித்து சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் புதிய போட் இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு டிடபிள்யூஎஸ் (BoAt Immortal Katana Blade TWS) என்ற கேமிங் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியது. இப்போது ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ப்ளூடூத் காலிங், அமோலெட் டிஸ்பிளே, 100+ ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் சுகாதார அம்சங்கள் கொண்ட போட் லூனார் டிகோன் […]
கடந்த 2021ம் ஆண்டு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்சான ‘ஒன்பிளஸ் வாட்ச்’ -ஐ (OnePlus Watch) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் வாரிசான ‘ஒன்பிளஸ் வாட்ச் 2’ -ஐ (OnePlus Watch 2) வெளியிடத் தயாராகி வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் 4ம் தேதி ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ம் தேதி ஒன்பிளஸ் 12, ஒன்பிளஸ் 12 ஆர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் […]
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்கும் நோக்கில், சேட்களுக்கு “சீக்ரெட் கோட்” (Secret Code) எனும் அம்சத்தை வெளிட்டுள்ளது. முன்னதாக கடந்த அக்டோபர் 18ம் தேதி சாட்டை லாக் செய்து ரகசியமாக வைப்பதற்கான “சாட் லாக்” (Chat Lock) அம்சத்தையையும் அதற்கான ஷார்ட்கட்டையும் வெளியிட்டது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி உங்களுடைய தனிப்பட்ட முக்கியமான சாட்களை லாக் செய்ய முடியும். மீண்டும் அதனை திறக்க உங்கள் கைரேகை அல்லது போனின் பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதன் அடிப்படையில் […]
கடந்த மே மாதம் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது இன் ஆக்டிவ் அக்கௌன்ட் பாலிசி (inactive account policies) புதுப்பித்தது. அந்த பாலிசியின் கீழ், குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயலில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ளதாக அறிவித்தது. இவ்வாறு கணக்குகள் நீக்கப்படும் போது, அந்த கணக்கில் இருக்கும் தகவலும் அழிந்துவிடும். கூகுளின் பயன்பாடுகளான ஜிமெயில், யூடியூப், டிரைவ் போன்றவற்றைப் பயன்படுத்த நாம் கூகுள் கணக்குகளைப் (Google Account) பயன்படுத்துகிறோம். சில நேரம் நாம் உருவாக்கிய அந்த கணக்கில் பாஸ்வர்டை […]