ரூ.39,999 பட்ஜெட்டில் 16 ஜிபி ரேம்..50 எம்பி கேமரா.! ரெட்மியின் புதிய மாடல்.?

RedmiK70

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ரெட்மி (Redmi), கடந்த நவம்பர் 29ம் தேதி ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதில் மூன்று வகையான மாடல்கள் அறிமுகமானது.

அதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) மாடல்கள் உள்ளன. இவற்றுடன் ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வாட்ச் 4 ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளது.

ரெட்மி கே70 விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே

ரெட்மி கே70 போனில் 3200 × 1440 (2K) பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் 68.7 பில்லியன் நிறங்களை ஒருங்கிணைத்துக் காட்டக் கூடியது. இதனால் கேம் விளையாடுவதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் ஸ்மூத்தாக இருக்கும்.

16ஜிபி ரேம்..64 எம்பி கேமரா..5500 mAh பேட்டரி.! அறிமுகமானது ரெட்மி கே70இ.!

4000 நிட்ஸ் வரையிலான பிரைட்னஸ் உள்ளதால் வெயிலில் கூட தெளிவாகப் பார்க்க முடியும். டால்பி விஷன் சப்போர்ட் மற்றும் பாதுகாப்பிற்காக ஆப்டிகல் இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் பேஸ் அன்லாக் வசதி உள்ளது.

பிராசஸர்

அட்ரினோ ஜிபியு கிராஃபிக்ஸ் பிராசஸருடன் இணைக்கப்பட்ட 4 என்எம் செயல்முறை கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ரெட்மி கே70 ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஹைப்பர் ஓஎஸ் உள்ளது.

அல்ட்ராசோனிக் டிஸ்டென்ஸ் சென்சார், ரியர் ஃப்ளிக்கர் சென்சார், கைரோஸ்கோப், எலக்ட்ரானிக் காம்பஸ், இன்ஃபிராரெட் சென்சார் போன்ற சென்சார்கள் உள்ளன. வைஃபை 7, வைஃபை டைரக்ட், மிராகாஸ்ட், புளூடூத் 5.3 ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி போன்ற அம்சங்களும் உள்ளன.

கேமரா

கேமராவைப் பார்க்கையில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி அல்ட்ரா-க்ளியர் மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

செல்ஃபிக்காக பச்-ஹோல் கட்அவுட் உடன் 16 எம்பி கேமரா உள்ளது. இந்த கேமரா மூலம் 720 பிக்சல் முதல் 8K தெளிவுடன் வீடியோவை பதிவு செய்யலாம். இதில் வீடியோ சூப்பர் ஆன்ட்டி சேக், பிரைவேசி ப்ரொடக்சன் வாட்டர் மார்க், டைம் லேப்ஸ் போட்டோகிராபி, பீக் போகஸ், மைக்ரோ மூவி, லாங் எக்ஸ்போசர், டைனமிக் போட்டோஸ், பனோரமா, 8K வீடியோ போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.

பேட்டரி

ரெட்மி கே70 209 கிராம் எடை கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக ஏதும் வைத்திருப்பது போல் தெரியாது. இதை அதிக நேரம் பயன்படுத்த 5000 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 120 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

24ஜிபி ரேம்..50 எம்பி கேமரா..5000mAh பேட்டரி.! ரெட்மியின் புதிய மாடல் என்ன தெரியுமா.?

ஸ்டோரேஜ் மற்றும் விலை

கருப்பு, சன்னி ஸ்னோ, பாம்போ மூன் ப்ளூ, லைட் எக்பிளான்ட் பர்பிள் என நான்கு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி எல்பிடிடிஆர் 5x ரேம் மற்றும் 1 டிபி யுஎஃப்எஸ் 4.0 ஃபிளாஷ் ஸ்டோரேஜ் வரை உள்ளது.

அதன்படி, மொத்தமாக 4 வேரியண்ட்கள் உள்ளன. அதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ்ம் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.

இதில் 12 ஜிபி ரேம் வேரியண்ட் 2,499 யுவான் (ரூ.29,400) என்ற விலையிலும், 16 ஜிபி ரேம் வேரியண்ட் 2,699 யுவான் (ரூ.31,700) என்ற விலையிலும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 2,999 யுவான் (ரூ.35,299) என்ற விலையிலும், 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 3,399 யுவான் (ரூ.39,999) என்ற விலையிலும் கிடைக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services