ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளுக்காக அதிகாரபூர்வ லேபிள் எனும் அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது. ட்விட்டரில் கணக்குகள் உறுதிப்படுத்தலில்(Verified Accounts) உள்ள சிக்கலை தவிர்க்க மாதம் $8 செலுத்தும் சில உறுதிப்படுத்தப்பட்ட கணக்காளர்களுக்கு அதிகாரபூர்வ லேபிளை ட்விட்டர் வழங்க இருப்பதாக ட்விட்டரின் தயாரிப்பு நிர்வாகி எஸ்தர் கிரா ஃபோர்ட் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன் உறுதிப்படுத்தப்பட்டு ப்ளூ டிக் பெற்றிருக்கும் அனைத்து கணக்குகளுக்கும் (அக்கௌன்ட்) இந்த அதிகாரபூர்வ லேபிள் கிடைக்காது என்றும், அரசாங்க கணக்குகள், மீடியா நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் […]
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், கிட்டத்தட்ட $4 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார். டெஸ்லாவின் தலைமை அதிகாரி மற்றும் ட்விட்டரின் புதிய தலைவர் எலான் மஸ்க், $3.95 பில்லியன் மதிப்புள்ள 19.5 மில்லியன் டெஸ்லாவின் பங்குகளை விற்றுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் $15.4 பில்லியன் மதிப்புள்ள அதன் பங்குகளை விற்றார், இதன் மூலம் மொத்தமாக டெஸ்லாவின் $20 பில்லியன் பங்குகளை மஸ்க் விற்றுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் டெஸ்லா பங்குகளை விற்க […]
ட்விட்டரிலிருந்து நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அழைத்துள்ளது. எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமையேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்து அதை நீக்கும் முயற்சியில் ப்ளூ டிக்கிற்கு மாதம் $8 என விலை அறிவித்தார். தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுவதாகக்கூறி உலகம் முழுவதும் பணிபுரியும் அதன் 50% ஊழியர்களை நீக்கியது. கிட்டத்தட்ட 3700 பணியாளர்களை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், […]
ட்விட்டரில் மஸ்க் தலைமை ஏற்ற பிறகு ஆடி மற்றும் ஜெனரல் மில்ஸ் கம்பெனி விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமையேற்ற பிறகு சில கம்பனிகள் தங்களது விளமபரங்களை ட்விட்டரில் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. ட்விட்டரில் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஸ்க், ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார், மேலும் உலகம் முழுதும் 50% பணியாளர்களை நீக்கினார். உள்ளடக்க அளவீடு (Content Moderation)கன்டென்ட் மாடரேஷன், வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க், […]
ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுதும் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த அக்-27 ஆம் தேதி ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், ட்விட்டரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்த வேண்டும் என அறிவித்தார். தற்போது உலகம் முழுதும் ட்விட்டரில் பணிபுரியும் அதன் 50% பணியாளர்களை நீக்கியுள்ளது. இது குறித்து எலான் மஸ்க், “ட்விட்டர் தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுகிறது, இதனை தவிர்க்க வேண்டுமானால், […]
சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக ட்வீட் எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பயனர்கள் மாதந்தோறும் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில் , டிவிட்டர் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் செய்யும் வசதி தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுளது. பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் எடிட் செய்யும் […]
கூகுள் இந்தியா நிறுவனம் 2022 நிதியாண்டில், இந்தியாவில் அதன் விளம்பர விற்பனையில் 79.4% அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் அதன் தளத்தில் கூகுள் விளம்பரங்கள் மற்றும் பிற தளங்கள் போன்ற நிரல்களின் மூலம் பயனர்கள் ஆன்லைன் விளம்பரங்களை இயக்க அனுமதிக்கிறது. கூகுள் விளம்பரத்திட்டங்கள், ஆன்லைன் விளம்பரங்களை உருவாக்க உதவுகின்றன, அவை வணிகத்தை மேம்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தயாரிப்புகள் அல்லது சேவைகளை விற்கவும், உங்கள் இணையதளத்திற்கான பார்வையாளர்களை அதிகரிக்கவும் பயன்படுகிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2022 நிதியாண்டில், கூகுள் […]
இந்தியாவின் பல பயனர்கள், இன்று காலை ட்விட்டர் வேலை செய்யவில்லை என புகார். இந்தியாவின் பல பயனர்களுக்கு இன்று காலை ட்விட்டரில் உள்நுழைய முடியாமல் செர்வர்(server down) வேலை செய்யவில்லை. இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். ட்விட்டரில் லாகின்(Login) செய்யும் போது, ஏதோ பிழை இருக்கிறது, மீண்டும் முயற்சிக்கவும் என்று திரையில் தோன்றியுள்ளது. இது குறித்து ஒரு சமூக ஊடகவாசி, கவலை கொள்ள வேண்டாம் இன்னொரு முறை முயற்சியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், ட்விட்டர் […]
வாட்ஸ் அப்பில் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பேசப்பட்டு வந்த நிலையில் இனி வீடியோ காலிலும் 32 பேர் வரை பேச முடியும். மெட்டா நிறுவனத்தின் முக்கிய செயலியான வாட்ஸ் அப், உலகெங்கும் பல பயனர்கள் உபயோகப்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. இந்த மெட்டா நிறுவனம் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு பயனர்களை எப்போதும் குதூகலப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் இன்று மேலும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. வாய்ஸ் காலில் 32 பேர் […]
ட்விட்டரில் “ப்ளூ டிக்” அம்சம் வைத்திருப்பதற்கு மாதத்திற்கு இனி $8 செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரின் புதிய நிறுவனரான எலான் மஸ்க் கடந்த வாரம் நடந்த ஒப்பந்தத்தின் முடிவில் வெற்றிகரமாக ட்விட்டரை தன் வசம் ஆக்கினார். அதன் பிறகு வந்த தகவலின் படி “ப்ளூ டிக்” எனும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை வைத்திருப்பதற்கு மாதம் $20 வரை வசூலிக்கப்படும் என்று இருந்த நிலையில் தற்போது அதன் நிறுவனர் மஸ்க் மாதம் $8 செலுத்த […]
மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்”முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின் கணக்கை ரத்து செய்ததால் ஏற்பட்ட அவருக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய” வலியுறுத்தினார். 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்திற்குப் பிறகு டிரம்ப் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ட்விட்டரை எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ததை பாராட்டியதோடு,”ட்விட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் […]
டிவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார் எலன் மஸ்க். இவர் ஏற்கனவே, டெஸ்லா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை நிர்வகிக்கிறார்.எலான் மஸ்க் பதவியேற்றது முதல் , டிவிட்டரின் முக்கிய பதவிகளில் இருந்தவர்களை நீக்கியது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 25 வரையிலான காலகட்டத்தில்,குழந்தைகளின் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் ஒப்புதல் இல்லா நிர்வாணத்தை ஊக்குவிப்பதற்காக 52,141 கணக்குகளை ட்விட்டர் இந்தியாவில் தடை செய்துள்ளது. மேலும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டர், […]
கடந்த வாரம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் $44 பில்லியனுக்கு வாங்கிய எலான் மஸ்க் அதன் சி.இ.ஓ ஆக பணியாற்ற இருக்கிறார். உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரை வாங்கிய பிறகு அதன் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகி அடங்கிய குழுவைக் கலைத்துவிட்டு நிர்வாகத்தின் ஒரே இயக்குநராக ஆகப் பொறுப்பேற்றார். ட்விட்டரின் தலைமை நிர்வாகி பராக் அகர்வாலை பதவி நீக்கம் செய்த பிறகு ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக(CEO), எலான் […]
யூ-டியூப் உள்ளடக்க(Content) உருவாக்குபவர்களின் மூலம் 7லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் 6,800 கோடி வருவாய் உருவாகிறது. யூ-டியூப் கிரியேட்டர்கள் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் செழித்து வருகிறது, உள்நாட்டு யூ-டியூப் கிரியேட்டர்கள் மூலம் ஆண்டுக்கு 6,800 கோடி வருவாய் இந்திய உள்நாட்டு உற்பத்திக்கு(GDP) செல்கிறது மேலும் 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகிறது என்றும் யூ-டியூப் இந்தியா தலைமை தயாரிப்பு அதிகாரி, நீல் மோகன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது யூ-டியூப், படைப்பாளிகளுக்கு ஃபேன்ஸ்களை மட்டும் உருவாக்கவில்லை அவர்களுக்கு இதன்மூலம் வருவாயையும் […]
ஒரே மாதிரியான லோகோ இருப்பதாக கூறி போன் பே தொடர்ந்த வழக்கில், மொபைல் பே நிறுவனத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். பண பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வரும் பிரபல மொபைல் செயலியான போன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், தனது நிறுவன லோகோவை மொபைல்பே எனும் பரிவர்த்தனை செயலி காப்பி அடித்துவிட்டதாக கூறி அந்த மொபைல் பே செயலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், […]
கூகுள் நிறுவனத்திற்கு 936 கோடி அபராதம் விதித்துள்ளது CCI ( Competition Commission of India) அமைப்பு. ப்ளே ஸ்டோர் கொள்கையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக, கூகுளுக்கு இந்திய ஆணையம் (சிசிஐ) செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக ₹ 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நிறுவனம் கூகுளின் செயலிகளை புது ஸ்மார்ட்போன்களில் நிறுவி சந்தைப்படுத்துவதால், போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக இதற்கு முன்னர் அக்டோபர் 20 அன்று,1337 கோடி […]
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் கடந்த ஒரு மணி நேரமாக முற்றிலுமாக செயலிழந்திருந்தது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் வாட்ஸ்அப் செயல்பட தொடங்கியுள்ளது.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது.இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் பயனர்கள் ட்விட்டர் பக்கம் திரும்பி வாட்ஸ்அப்பின் செயலிப்பை ட்விட்டரில் #WhatsAppDown என்ற ஹேஷ்டேக்குடன் கேலியும் கிண்டலும் செய்து ட்வீட் செய்து வருகின்றனர்.அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. When your WhatsApp is playing up but you come to Twitter and see […]
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸாப் செயலி இந்தியா உட்பட உலகமுழுவதும் பல நாடுகளில் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட நபர்களுக்கும்,குழுக்களுக்கும் மெசேஜ் செய்ய முடியவில்லை என்று வாட்ஸாப் பயனர்கள் ட்விட்டர் மற்றும் முகநூலில் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களால் தற்போது செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை.செயலிழப்பு கண்டறிதல் இணையதளம் DownDetector ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு WhatsApp வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்தாலி மற்றும் துருக்கியைச் சேர்ந்த சமூக ஊடக பயனர்களும் செய்திகளை […]