,

4-வது மாதமாக தொடர்ந்து சரிவை காணும் பேடிஎம் UPI ..!

By

பேடிஎம் யூபிஐ: நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த யூபிஐயின் பரிவர்த்தனைகளில் பேடிஎம் 13% சதவீதமாக இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த மே மாதம் இறுதியில் அது 8.1% ஆக இறக்கம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பேடிஎம் பயனர்களின் சில புகார்களின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம், பேடிஎம் பேமெண்ட்ஸ் துணை நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டது. இதன் காரணமாக தொடர்ந்து மாதந்தோறும் சரிவை கண்டதுடன், பேடிஎம் பங்குகள் சுமார் 55% சதவீதம் வரை சரிவை கண்டது.

கடந்த மே மாதத்தில் மட்டும் யூபிஐ நெட்வொர்க் 14.04 பில்லியன் ரூபாய் பரிவர்த்தனைகளைச் செய்திருக்கிறது, இது மாதந்தோறும் 5.5% அதிகமாகும். ஆனால், இந்த யூபிஐ பரிவர்த்தனைகளில் பேடிஎம் மட்டும் சரிவை மட்டுமே கண்டுள்ளது.

நான்காம் நிதியாண்டின் இறுதியில் பேடிஎம் நிறுவனம், வணிகத்தில் பல இடையூறு காரணமாக வருவாய் மற்றும் லாபம் ஈட்டுவதில் தொடர்ந்து 4-வது மாதமாக சற்று சரிந்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023