tecno phantom ultimate
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த சில மாதங்களாக புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் போட்டியிடும் விதமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி விவோ எக்ஸ் சீரிஸில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வெளியிட்டது.
விவோ எக்ஸ் போல்ட் பயனர்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து விவோ நிறுவனம் அதன் அடுத்த படைப்பான விவோ எக்ஸ் ஃபோல்ட் 2 என்ற ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டது. இந்த எக்ஸ் ஃபோல்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது, இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றது.
இந்நேரத்தில் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து, ஸ்மார்ட்போன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில், விவோ மற்றும் டிரான்ஸ்ஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ரோலபில் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த ரோலபில் ஸ்மார்ட்போன் 2024ம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
ஐடெல், டெக்னோ மற்றும் இன்பினிக்ஸ் போன்ற பிரபல பிராண்டுகளின் தாய் நிறுவனமான டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ், ‘டெக்னோ பாண்டம் அல்டிமேட்‘ என்ற ஸ்மார்ட்போனை கடந்த ஆகஸ்ட் மாதம் காட்சிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் 6.55 அளவுள்ள மெயின் டிஸ்ப்ளே ஆனது உள்ளது. இதில் மேற்புறம் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் 1.3 வினாடிகளில் 7.11 இன்ச் வரை அழகாக விரிவடைந்து பெரிய டிஸ்ப்ளேவாக ஆக மாறுகிறது.
இந்த பாண்டம் அல்டிமேட் ஆனது 2,296 x 1,596 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட லோ டெம்பரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO) தின் – பிலிம் டிரான்சிஸ்டர் (TFT) ரோலபில் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இருக்கக்கூடிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை போலல்லாமல், ரோலபில் ஸ்மார்ட்போன்கள் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டால் பயனரின் தேவைக்கு ஏற்ப டிஸ்ப்ளே அளவை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இதேபோல சாம்சங், எல்ஜி, மோட்டரோலா மற்றும் டிசிஎல் போன்ற நிறுவனங்களும் இதேபோல ரோலபில் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மோட்டோரோலா தனது ரோலபில் ரிசர் (Rizr) ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் (MWC) வெளியிட்டது. இதேபோல சாம்சங் தனது ஃப்ளெக்ஸ் ஹைப்ரிட் ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது நடிப்பில்…
சென்னை : பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி,…
ஹவாய் : ஜூலை 20 அன்று, வடக்கு பசிபிக் கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.4 என்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
அமெரிக்கா : தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது இளம் செஸ் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் செஸ்…
டெல்லி : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்க்கவோ அல்லது தயாரிக்கவோ ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளைப் பயன்படுத்தக் கூடாது…
விழுப்புரம் : மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக…