ரூ.7,000 க்கு அட்டகாசமாக அறிமுகம் ஆகும் டெக்னோ பாப் 8! எப்போது தெரியுமா?

Published by
பால முருகன்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ மொபைல் சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சம் கொண்ட ஒரு மொபைல் போனை கொண்டு வந்து இருக்கிறது. அந்த போனின் பெயர் என்னவென்றால் டெக்னோ பாப் 8 (Tecno Pop 8). இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,000-க்கும் குறைவாக இருக்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த ஆண்டின் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்து இருக்கும் தகவல் என்னவென்றால், ரூ.7,000 க்கு இந்த போன் விற்பனை வரலாம் என கூறப்படுகிறது. இந்த போனின் அம்சங்கள் என்னவென்பதையும், இந்த போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதனை பார்க்கலாம்.

டெக்னோ டாப் 8 சிறப்பு அம்சங்கள் :

இந்த டெக்னோ பாப் 8 (Tecno Pop 8) போன் ஆனது எல்சிடிஎச்டி பிளஸ் 6.6-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 720 x 1612 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) வசதியுடன் வருகிறது. எனவே, படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்க்கும்போது உங்களுக்கு நன்றாக இருக்கும்.

இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் 13எம்பி பின் கேமராவையும் + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது . எனவே புகைப்படங்களை எடுக்க விரும்புவர்களுக்கும் இந்த போன்  கண்டிப்பாக பிடிக்கும்.  இந்த ஃபோனுக்கு 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இருக்கிறது. அத்துடன் 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியுடனும் வருகிறது.

மேலும், 4ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த டெக்னோ பாப் 8 ஸ்மார்ட்போன் வருகிறது என்பதால் கண்டிப்பாக இந்த போன் உபயோகம் செய்யும் போது போன் ஹேங் பிரச்சனை இருக்காது என தெரிகிறது.

அறிமுகம் எப்போது? 

இந்த அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ள இந்த போனை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த போன் அறிமுகம் ஆகும்போது தான் விலை எவ்வளவு என்பது தெரிய வரும் என்று கூறப்படுகிறது. நம்ப தக்க வட்டாரத்தில் இருந்து கிடைக்கும் தகவலை வைத்து பார்க்கையில் இந்த போன் ரூ.7,000 க்கு வரும் என்றே கூறுகிறார்கள்.

கண்டிப்பாக இந்த விலையில் இந்த டெக்னோ பாப் 8  போன் அறிமுகம் ஆனது என்றால் பலரும் வாங்குவார்கள். அந்த அளவிற்கு குறைவான பட்ஜெட்டில் இந்த போன் நிறைய நல்ல அம்சங்களை கொண்டு இருக்கிறது. பட்ஜெட் போன் விரும்புபவர்கள் இந்த போன் வாங்கலாம்.

Published by
பால முருகன்

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

4 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

5 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

5 hours ago