அசத்தல் அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்..! இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்..!

Published by
செந்தில்குமார்

வாட்ஸ்அப் நிறுவனம் ஒரே கணக்கை பல தொலைபேசிகளில் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த அம்சமானது ஒரு வாட்ஸ்அப் கணக்கை பல மொபைல் போன்களில் பயன்படுத்துவது ஆகும்.

இந்த அம்சம் மூலம் பயனர்கள் தங்களது மொபைலில் உள்ள வாட்ஸ்அப்பை, இணையதளம், டேப்லெட்டுகள் மற்றும் டெஸ்க்டாப்கள் போன்ற நான்கு கூடுதல் சாதனங்களில் இணைக்கலாம். மேலும் உங்களது முதன்மை சாதனத்தில் (மொபைல் போன்) உள்ள வாட்ஸ்அப் நீண்ட காலத்திற்கு செயலில் இல்லாமல் இருந்தால், அந்த கணக்கு இணைக்கப்பட்ட மற்ற துணை சாதனங்களிலிருந்தும் தானாகவே வெளியேறிவிடும்.

இந்த புதுப்பிப்பு உலகில் உள்ள சில பயனர்களுக்கு மட்டுமே வந்துள்ளது, வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும்  வரும் வாரங்களில் துணை சாதனங்களுடன் இணைப்பதற்கான மாற்று வழியை அறிமுகப்படுத்துவதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதில் கியூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதை தவிர, மொபைல் எண்ணை வாட்ஸ்அப் இணையத்தில் உள்ளிட்டு வாட்ஸ்அப்பை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

1 hour ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

2 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

3 hours ago

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது – திருமாவளவன்!

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சென்று அவருடைய வீட்டில் வைத்து…

3 hours ago

அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு : இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி…

4 hours ago

நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை…

5 hours ago