WhatsappMsgEdit [Image source : WABetaInfo]
வாட்ஸ்அப் நிறுவனம் செய்தியை எடிட் செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் பயனர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த அம்சத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப்பில் அனுப்பும் செய்திகளை எடிட் செய்ய முடியும். ஆனால் வேறு சாதனத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியை உங்களால் திருத்த முடியாது.
இதன்மூலம் செய்தியைத் தவறாக அனுப்பிவிட்டால் அடுத்த 15 நிமிடத்துக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம். தற்பொழுது இந்த அம்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், பயனர் அனுப்பிய செய்தியைத் (iMessage) திருத்தும் அம்சத்தை ஆப்பிள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…