தொழில்நுட்பம்

ஸ்டைலிஷ் லுக்குடன் “Nothing”-ன் அடுத்த அவதாரம்.! இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Published by
கெளதம்

நத்திங் ஃபோன் 2 (5ஜி போன்) வெளியீட்டுத் தேதி இறுதியாக அதிகாரப்பூர்வமாக ஜூலை 11 ஆம் தேதி, இந்தியா மற்றும் உலகளவில் விற்பனைக்கு வருகிறது. 

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான நத்திங் டெக்னாலஜி அதன் ஸ்மார்ட்போனின் வெளிப்படையான பின்புறத்தைக் கொண்டு மக்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. நிறுவனத்தின் நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகமானது பயனர்களிடையே அதிக பரபரப்பைக் கண்டாலும், கேமராவின் தரம் போன்ற வழக்கமான சிக்கல்களை சந்தித்தது.

Nothing Phone 2 [Image source : CNET]

அதனை பூர்த்தி செய்யும் விதமாக நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதை அந்த நிறுவனம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தது. இந்நிலையில், நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வரும் ஜூலை மாதம் 11ம் தேதி உலக அளவில் அறிமுகப்படுத்தபடும் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்பொழுது, வரவிருக்கும் நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பு அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்ற தகவல்கள்களை காணலாம்.

Nothing Phone 2 [Image source : Twitter/@TechDadu]
  • நத்திங் போன் 1-ல் உள்ள அம்சங்கள் போலவே சில அம்சங்களை தவிர்த்து நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவில் நத்திங் போன் 1-ன் ஆரம்ப விலை ரூ.32,999 என அறிவிக்கப்பட்டது. நத்திங் போன் 2- விலை ரூ.40,000-க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 SoC (Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC) என்ற உயர்தர சிப் பயன்படுத்துவதால், நத்திங் போன் 2 போனின் விலை, முதல் போனை விட அதிகமாக இருக்கும்.
  • நத்திங் போன் 1-ல் பயன்படுத்தப்பட்டிருக்கும் 4,500mAh பேட்டரியை விட, நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் 4,700mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
  • நத்திங் போன் 2 ஸ்மார்ட்போன் வடிவமைப்பை இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை, எனவே இது முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கலாம்.
  • மேலும் OnePlus ஸ்மார்ட்போனில் அதே Snapdragon 8+ Gen 1 SoC உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by
கெளதம்

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

10 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago