தொழில்நுட்பம்

அடடா…200MP கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமானது “Realme11Pro5G” ஸ்மார்ட் போன்.!!

Published by
பால முருகன்

ரியல்மீ (Realme) நிறுவனம் இந்தியாவில் வரும் ஜூன் 8ம் தேதி அதன் ரியல்மீ 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) சீரிஸை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இந்த ஸ்மார்போன் சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் ரியல்மி 11 ப்ரோ (Realme 11 Pro) மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி  (Realme 11 Pro+5G) என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

realme11ProSeries5G EVENT [Image Source : Twitter/@jaisrkian]

இந்த போன்களின் அறிமுக நிகழ்வு இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வுக்கான நேரடி ஒளிபரப்பு  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்த போன் எப்போது அறிமுகம் ஆகும் என சிலர் காத்திருந்த நிலையில், தற்போது, போன் அறிமுகம் ஆகியுள்ளதால் போனை வாங்குவதற்கு ரெடியாக உள்ளார்கள்.

போன்களின் சிறப்பு அம்சங்கள் 

ரியல்மி 11 ப்ரோ + 5G டிஸ்ப்ளே (Display):

இந்த ஸ்மார்ட் போனானது 6.7 இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட வளைந்த AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. இதன் மூலமே இது பலருக்கும் பிடித்த நல்ல போனாக இருக்கும் என தெரிகிறது.

realme 11 pro [Image Source : Twitter/@realmeIndia]

ரியல்மி 11 ப்ரோ டிஸ்ப்ளே (Display):

இந்த ஸ்மார்ட்போனது  6.4  இன்ச் FHD+ (முழு தெளிவு திறன்) கொண்ட AMOLED (அமோல்ட்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 90Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) வழங்குகிறது. மேலும் இதில், 1,000 நெட்ஸ் ஒளித்திறனை கொண்டுள்ளது.

கேமரா

ரியல்மி 11 ப்ரோ + 5G

  • இந்த ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் 200MP ரியர் கேமரா மற்றும்  8MP அல்ட்ரா வைடு லென்ஸ் + 2MP மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. மேலும் 32MP செல்பி கேமரா ரியல்மி 11 ப்ரோ பிளஸ் போனில் இருக்கிறது.

ரியல்மி 11 ப்ரோ

200MPzoomToTheNextLevel [Image Source : Twitter/@realmeIndia]
  • 64MP பிரைமரி கேமரா மற்றும்  2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட  இரண்டு பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பேட்டரி வசதி

  • ரியல்மி 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது.
realme11ProSeries5G [Image Source : Twitter/@realmeIndia]
  • ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5 ஜி 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.

விலை எவ்வளவு..? 

இன்று அறிமுகமான  இந்த போன்கள் விலை பற்றிய விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன் 15-ஆம் தேதி விற்பனைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையில், இந்த இரண்டு போன்களுமே நல்ல அம்சங்களை கொண்ட தரமான போனாக தான் இருக்கிறது. எனவே, ஆர்வம் உள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம். இன்னும் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

3 minutes ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

12 minutes ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

37 minutes ago

மணிப்பூர்: மியான்மர் எல்லையில் துப்பாக்கிச்சூடு.., ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பலி.!

மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…

60 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

1 hour ago

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

17 hours ago