டேட்டிங் மற்றும் பணபரிவர்த்தனை ஆப்ஸுக்கு ஆப்பு வைக்கும் எக்ஸ்.! எலான் மஸ்க் அதிரடி தகவல்..

Elon Musk

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார். அதோடு, ப்ளூடிக் சந்தா கட்டணம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களையும் கொண்டுவந்தார்.

தற்போது இன்னும் பல திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ட்விட்டரை வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைட் எக்ஸ் எனும் கூட்டத்தில், தங்களின் மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸை, 2024 ஆம் ஆண்டிற்குள் ஒரு முழுமையான டேட்டிங் தளமாகவும் டிஜிட்டல் வங்கியாகவும் மாற்ற இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இது பிரபல டேட்டிங் தளங்களான டிண்டர் மற்றும் பம்பில் மட்டுமல்லாமல் பனப்பரிவர்த்தனை செயளிகளுக்கும் பெரும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாக உள்ளது. இருப்பினும், எக்ஸ் எப்படி டேட்டிங் தளமாக மாறும் என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை. இன்று பெரும்பாலான டேட்டிங் செயலிகள் பணம் செலுத்துவதற்கான சந்தா திட்டங்களைப் பின்பற்றுகின்றன.

எனவே எலான் மஸ்க்கும் இந்த அம்சங்களை அணுக சந்தா திட்டங்களை அறிமுகம் செய்யலாம். இதற்கிடையில் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருப்பது போல, ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து பேசும் வசதியை எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த அம்சம் ஒரு சில பயனர்களுக்கு இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வேலை செய்யும் இந்த அம்சத்தின் மூலமாக, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல் உலகில் எங்கிருந்தாலும் நீங்கள் விரும்பும் நபரிடம் பேசலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்