அரசியல்

அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மேலும், தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபாலனும், துணைத் தலைவராக முன்னாள் எம்பி அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, டிடிவி தினகரன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காவிரியின் […]

5 Min Read
TTVDhinakaran

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் சோதனை நடத்தியபோது ரூ.22 லட்சம் பறிமுதல் – அமலாக்கத்துறை

கடந்த 3-ஆம் தேதி திண்டுக்கல்லில் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.டி.சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. இந்த சோதனை முடிந்த மறுநாளே நமக்கு செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, தனலட்சுமி மார்பிள்ஸ் உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும், சின்ன ஆண்டான் கோயில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டது. […]

4 Min Read
Enforcement Directorate

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் 22,000 பேருக்கு வேலை – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை..!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் பாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்றைய மதுரை கிழக்கு மற்றும் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், இன்றைய ‘என் மண், என் மக்கள்’ பயணத்தில், மதுரை கிழக்கு மற்றும் […]

7 Min Read
EnMannEnMakkal

#BREAKING : பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்த குடியரசு தலைவர்..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்துள்ளார். குடியரசுத் தலைவர் வருகை முன்னிட்டு மசினக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களில் உள்ள 1000த்திற்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியை சந்தித்து […]

3 Min Read
Droupadi Murmu

இந்தியைத் தவிர்த்த தமிழ்நாடு பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது -கனிமொழி எம்.பி

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். ஹிந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல.  அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டமூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. […]

4 Min Read
Kanimozhi mp

திமுக அனைத்து தொண்டர்களுக்கும் பொதுவானது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாடினார். அப்போது பேசிய அவர், கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகளை பலப்படுத்த வேண்டும். கட்சியினர் இப்போதே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். திமுக அனைத்து தொண்டர்களுக்கும் […]

5 Min Read
Tamilnadu CM MK Stalin

அண்ணாமலை கத்துக்குட்டியா.? செல்லூர் ராஜு கத்துக்குட்டியா.? பாஜக து.தலைவர் கரு.நாகராஜ் கடும் விமர்சனம்.!  

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் கூட்டணியில் இருந்து ஒதுக்கவில்லை. என்று கருத்து தெரிவித்து இருந்தார்.  இவரது பேச்சுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாமலை மாநில தலைவர் மட்டுமே, நாங்கள் கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்களான ஜே.பி.நட்டா, அமித்ஷா, பிரதமர் மோடியிடம் மட்டுமே கலந்து ஆலோசிப்போம் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு […]

4 Min Read
ADMK Ex Minister Sellur Raju - BJP TN President Annamalai

காவேரி நீர் விவகாரம்.. இல்லாத ஊருக்கு வழி முதலமைச்சர்.! இபிஎஸ் கடும் கண்டனம்.!

காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின் படி தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவுக்கு மிக குறைவான அளவே, காவேரி நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டுள்ளது. தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவுப்படி உரிய அளவு நீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக முதல்வர் கடிதம் வாயிலாகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரடியாக சென்றும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காவேரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக அரசு உரிய […]

5 Min Read
Tamilnadu CM MK Stalin - ADMK Chief secratary Edappadi Palanisamy

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதை சட்டரீதியாக அணுக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மக்கள் […]

2 Min Read
vijay makkal iyakkam

அதிமுகவை விமர்சிப்பவர்கள் தங்கள் நிலையை அறிந்து பேசுங்கள்.. செல்லூர் ராஜு காட்டம்.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ எனும் பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தின் போது, சில தினங்களுக்கு முன்னர் பேசும் போது, ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் கூட்டணியில் இருந்து ஒதுக்கவில்லை. என்று கருத்து தெரிவித்து இருந்தார். இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. இவரது பேச்சுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர். அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் […]

4 Min Read
ADMK Former Minister Sellur Raju - Tamilnadu BJP President Annamalai

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று நடைபெற்ற மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். ஹிந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல.  அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டமூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக்கூடாது. […]

4 Min Read
mk stalin

மணிப்பூர் சட்டப்பேரவை கூடும் நாள் வெளியானது.! பரபரான சூழலில் ஆளுநரிடம் மாநில அரசு பரிந்துரை.!

மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் அங்கு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மொதலானது தற்போது வரை  தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]

3 Min Read
Manipur Assembly

அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது – நிர்மலா சீதாராமன்

தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் 5 ஏக்கரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது, கனிமொழி எம்.பி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பல அதிகாரிகள் உடனிருந்தனர்.  இந்த நிலையில், அடிக்கல் நாட்டியபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூரில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. ஆதிச்சநல்லூரில் பல கட்டங்களாக நடத்தப்பட்ட […]

3 Min Read
ITR Nirmala FMU

இந்திய மொழிகள் ஒருபோதும் இந்தியிடம் மண்டியிடாது – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.!

புது டெல்லியில் நேற்று நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 38வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். அதில் உரையாற்றிய அவர், இந்தி ஏற்றுக்கொள்ளும் வேகம் மெதுவாக இருந்தாலும், எதிர்ப்பின்றி இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று  கூறியுள்ளார். உள்ளூர் மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை என்றும், அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிப்பதன் மூலம் மட்டுமே தேசம் அதிகாரம் பெறும் என்றும்  கூறினார். மேலும், பாரம்பரியத்தை மதிப்பது மற்றும் காலனித்துவ அடையாளங்களை அழிப்பது உள்ளிட்ட ஐந்து […]

4 Min Read
M.P venkatesan Neet

ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் சார்பாக தாமிரபரணி கரையில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் அகழாய்வு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன என ஏராளமான பொருட்கள் கிடைத்தன. அருங்காட்சியகத்தில் அகழாய்வு பணியின் போது எடுக்கப்பட்ட […]

3 Min Read
Nirmala Sitharaman

மாநில மொழிகளுக்கு இந்தி மொழி போட்டி அல்ல.! மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று டெல்லி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஹிந்தி மொழி பற்றியும், பிரதான மாநில மொழிகள் பற்றியும் தனது கருத்துக்களை முன்வைத்தார். அவர் பேசுகையில் அனைத்து மாநில பிரதான மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும். அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது […]

3 Min Read
Union Minister Amit shah

இன்று தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்..! முதலில் எங்கு செல்கிறார் தெரியுமா..?

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இன்று காலை 11 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கர்நாடக மாநில மைசூர் வருகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் முதுமலை அடுத்த மசினகுடி ஹெலிபேடில்  உள்ளார். பின் அங்கிருந்து, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு காரில் செல்ல உள்ளார். அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார்.  அங்கிருந்து மாலை […]

3 Min Read
President Droupadi murmu

தமிழக அளவிலான பாஜக கூட்டணியில் பாமக இல்லை.! அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு.!

நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணியின் போது விளைநிலங்கள் பாதிக்கப்பட்டதால், அதனை எதிர்த்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வன்முறை ஏற்பட்டது. இதனால் பாமகவினர்  வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை நேற்று அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களுக்காக போராடிய பாமகவை சேர்ந்த 55 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அவர்களை காவல்துறையினர் […]

4 Min Read
PMK Leader Anbumani Ramadoss - BJP Tamilnadu president Annamalai

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பே திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டு இருந்தார். இந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது காணொலி வாயிலாக நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழாவை குறிப்பிட்டு இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

2 Min Read
Tamilnadu CM MK Stalin

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது – கே.எஸ்.அழகிரி

உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி மேல்முறையீடு செய்திருந்த நிலையில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களவையில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உரையாற்றும் போது, அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி பேசிய 20 நாட்களில் சூரத் நீதிமன்றத்தில் ஏற்கனவே நடைபெற்ற அவமதிப்பு வழக்கில் இரண்டாண்டு தண்டனை […]

5 Min Read
K.S.Alagiri