அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு!

TTVDhinakaran

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளராக டிடிவி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபாலனும், துணைத் தலைவராக முன்னாள் எம்பி அன்பழகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, டிடிவி தினகரன் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை மேம்போக்காகக் கையாளும் தி.மு.க அரசிற்கு கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்தனர்.

கழக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், புலம்பெயர்ந்த அன்பிற்கினிய தமிழர்கள், நம் கழகத்தின் மீது பற்று கொண்டு அவர்கள் வாழ்ந்துவரும் நாடுகளில் கழக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதற்கட்டமாக “ஐக்கிய அரபு அமீரக மண்டலம்” மற்றும் “ஐக்கிய அரபு குவைத் மண்டலம்” என் கழக பொதுச்செயலாளர் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

கழக சட்ட விதிகளின்படி நடைபெறும் இப்பொதுக்குழு, கழகத்தின் விதி 9 பிரிவு 1-ன் படி, 94 கழக மாவட்டங்களில் கோவை கிழக்கு, கோவை மேற்கு, கோவை மத்தியம், கோவை வடக்கு, கோவை தெற்கு, விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, திருநெல்வேலி மாநகர் வடக்கு, திருநெல்வேலி மாநகர் தெற்கு ஆகிய கழக மாவட்டங்கள் முறையே, கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர் கிழக்கு, திருநெல்வேலி புறநகர் மேற்கு என மறுசீரமைக்கப்பட்டு அறிவித்ததை ஒருமனதாக அங்கீகரிக்கிறது எனவும், திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்