திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டு நடிகர் அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டாரகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதினை நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கினார்.
66வது இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவானது டிச., 23-ம் தேதி அன்று டெல்லி உள்ள விக்யான் பவனில் கோலகலமாக நடைபெற்றது.இவ்விழாவில் தான் தெலுங்கில் வெளியான மகாநடி படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார். சிறந்த தெலுங்குப் படத்திற்கான தேசிய விருதையும் மகாநடி பெற்றது. மேலும் தமிழில் பாரம் படமும் அதேபோல் இந்தியில் அந்தாதூன் என்ற படமும் சிறந்த படங்களாக தேர்வாகி அதற்கான விருதினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.
இந்நிலையில் திரைப்படத்துறையிலேயே உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு இந்த ஆண்டுக்கான நடிகராக அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் சில காரணங்களால் அந்நிகழ்ச்சியில் அவரால் பங்குகொள்ள முடியாமல் போனது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்ட நடிகர் அமிதாப் என்னால் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதுக்கு வருத்தம் தெரிவித்தார்.இந்நிலையில் தான் மத்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து அறிப்பு ஒன்றை வெளியிட்டார் அதில் இன்று நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதே போல் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திரைப்படத்துறையின் உயரிய விருதான் தாதா சாகேப் பால்கே விருதை வழங்கினார். இந்த நிகழ்வினை காண நடிகர் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன், மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.விருதைப் பெற்ற பின்னர் பேசிய நடிகர் அமிதாப் பச்சன், தாதா சாகேப் பால்கே விருது பெறுவதை மிக பெருமையாக கருதுகிறேன்.மேலும் நான் இந்த இடத்தில் நிற்ப்பதற்கு காரணம் என் ரசிகர்கள் மற்றும் அவர்களின் மிகப்பெரிய ஆதரவு என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…