நாங்க வேற மாறி…உலகம் முழுவதும் வெளியான AK-வின் “வலிமை”…!

Published by
Edison

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் வெளியானது.

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது.போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் டீசர், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து,அஜித்குமார் ரசிகர்களுக்கு இரண்டரைவருட காத்திருப்பிற்கு பலனாக ஜனவரி 13-ஆம் தேதி “வலிமை” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக “வலிமை” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதனால்,வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் திரையில் பார்ப்பதற்கு எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தார்கள்.இந்நிலையில்,நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் நான்கு மொழிகளில் வெளியானது.அதன்படி,தமிழகத்தில் 900-க்கும் அதிகமான திரையங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய முதல்காட்சியை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும்,உற்சாகத்துடனும் கண்டுகளித்துள்ளனர்.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டர்களில் அஜித் படம் வெளியாகியுள்ளதால் பட்டாசு வெடித்து,பைக் சாகசம் செய்து ஆட்டம்பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

Recent Posts

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

7 minutes ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

33 minutes ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

1 hour ago

மைக்ரோசாஃப்ட் அலுவலகம் அருகே விழுந்த ஈரான் குண்டுகள்…, 5 பேர் படுகாயம்.!

இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…

2 hours ago

மளமளவென சரிந்த பங்குகள்.., ‘குற்றச்சாட்டுகள் தவறானவை’ – சன் டிவி குழுமம் விளக்கம்.!

சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…

3 hours ago

போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!

இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…

3 hours ago