கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளி பெண் முதல்வர், தேநீர் விற்பனை செய்து வருகிறார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, 35; இவரது மனைவி செல்வி, 32. இவர், முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். இவரது கணவர் சிவா நடத்தி வரும் மழலையர் பள்ளியில், முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச், 24 முதல், ஊரடங்கு அமலில் உள்ளதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இதனால், வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பஸ் ஸ்டாப் அருகில், ஆவின் பாலகம் பெட்டிக் கடையில், டீ விற்பனை செய்து வருகிறார். இதுகுறித்து செல்வி கூறியதாவது, என் கணவர் நடத்தி வரும், அக் ஷய வித்யாலயா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில், முதல்வராக பணியாற்றி வருகிறேன். ஊரடங்கால் பள்ளி மூடி இருப்பதால், போதிய வருவாய் இல்லை.கிராமப்புற மாணவ – மாணவியரின் பெற்றோரால், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அவர்களை தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.குடும்ப வருவாய்க்காக, என் மாமனார் நடத்தி வரும் பெட்டிக் கடையில் தினமும், டீ விற்பனை செய்து வருகிறேன். ஏராளமான தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வருவாய் இன்றி, வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…