மஹாலக்ஷ்மியின் சகோதரன் வலம்புரி சங்கினை பூஜை செய்யும் முறையும்! அற்புத பலன்களும்!

Published by
மணிகண்டன்
  • ஆழ்கடலில் இருந்து எடுக்கப்படுவதால் வலம்புரி சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது.
  • சங்கு சிறியதாக இருந்தால் பண பெட்டியில் வைத்து விடலாம். பெரியதாக இருந்தால் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

பாற்கடலில் மகாலட்சுமி பிறந்திருந்தாள். அதே பாற்கடலில் தான் சங்கு கிடைப்பதால் சங்கு மகாலட்சுமியின் சகோதரனாக பார்க்கப்படுகிறது. அந்த சங்கினை வீட்டில் வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி, நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும். அந்த சங்கு வலம்புரிச் சங்காக இருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பு. சங்கில் இருந்து வரும் ஓம் ஒலியானது நம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை போக்க வல்லது. அந்த சங்கு  சிறிய அளவில் இருந்தால் வீட்டு பீரோவில் பண பெட்டியில் வைத்து விடலாம் பெரியதாக இருந்தால் பூஜையறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

வலம்புரி சங்கினை பூஜை செய்யும்போது ஒரு பித்தளை தாம்பூலத்தில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் அலங்கரிக்கப்பட்ட சங்கினை வைத்துவிட வேண்டும். கூர்மை பகுதியானது கிழக்கு நோக்கியும், மற்றொரு பகுதி மேற்கு நோக்கியும் இருக்கும்படி வைத்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜை செய்ய தொடங்கும் நாளானது வளர்பிறை வெள்ளி கிழமையாக இருந்தால் மிக நல்லது. வாரம் ஒரு முறையாவது சங்கினை நன்றாக சுத்தம் செய்து அதனுள் தண்ணீர் மாற்றி பூஜை செய்யவேண்டும். பச்சரிசியை மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடுங்கள்.

மகாலட்சுமியின் சகோதரனான சங்கினை கவனிக்காமல் ஒரு மூலையில் வைத்து விடக்கூடாது. அது நமது வீட்டுக்கு நல்லது அல்ல.

Published by
மணிகண்டன்

Recent Posts

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

27 minutes ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

59 minutes ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

2 hours ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

2 hours ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

4 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

5 hours ago