உலகின் மிக நீண்ட காலம் பிரதமர் என்ற பெருமையை பெற்ற பஹ்ரைன் நாட்டின் பிரதமர் ஷேக் கலிஃபா காலமானார்.
உலகின் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் ஷேக் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா. 1971ல் இருந்து பஹ்ரைன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்தார் . 84 வயதான இவர் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்துள்ளதாக பஹ்ரைன் நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவரது உடல் திருப்பி அனுப்பிய பின்னர் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாகவும் , அதில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஹ்ரைன் நாட்டின் இளவரசரான ஷேக் கலிஃபா காலமானதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உத்தியோகபூர்வ துக்கத்தை அனுசரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதனுடன் அரசாங்க அமைச்சகங்கள் உள்ளிட்டவைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற ஷேக் கலிஃபாவிற்கு 2017ஆம் ஆண்டு உலக அமைதிக்கான கலாச்சார விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…