கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் 112 வயதுடைய உலகின் மிக வயதான நபர், இவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளது.
ஸ்பெயினின் சாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. வடக்கு ஸ்பெயினில் உள்ள லியோனுக்கு அருகில் புவன்ஸ் காஸ்ட்ரோ எனும் பகுதியில் பிப்ரவரி 11, 1919இல் பிறந்துள்ளார்.
ஆனால் இவர் தற்போது வரை பிப்ரவரி 8 ஆம் தேதி தான் தனது பிறந்தநாளை கொண்டாடுவதாக கூறப்படுகிறது. 4.92 அடி உயரம் கொண்ட சாதுர்னினோவுக்கு ஏழு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். ஆனால் குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்போதே தனது மனைவி இறந்து விட்டார் என முதியவர் கூறியுள்ளார்.
தற்போது அவரது ஒரு மகள் மற்றும் மகன் தான் அவரை வைத்து பராமரித்து வருவதாகவும் அவருக்கு 14 பேரக்குழந்தைகளும், 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 18 மாதங்கள் தனது குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டதாகவும், தற்பொழுது 112 வயது நிறைவடைந்து உள்ளதை அனைவரும் கொண்டாடியதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…