காளையை களத்திற்கு அழைத்து வந்த 2 வயது வீர தமிழச்சி!

அவனியாபுரம் மேல தெருவை சேர்ந்த 2 வயது சிறுமியான உதயா, குருநாதர் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்துள்ளார்.
தமிழகம் முழுவதும் தை திருநாளாம் தமிழர் திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் வண்ணம் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்வானது, இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து காளையின் உரிமையாளர்கள் காளைகளை கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக அவனியாபுரம் மேல தெருவை சேர்ந்த 2 வயது சிறுமியான உதயா, குருநாதர் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை வாடிவாசலில் அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்துள்ளார். இந்த வீரதமிழச்சியின் செயல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
July 9, 2025