3 மாதமாக எஜமானர் இறந்தது தெரியாமல் அவரின் வரவுக்காக காத்திருந்த நாய்.
முதலில் கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. தற்போது சீனாவில் இந்த கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸால் 3 மாதத்திற்கு முன் உயிரிழந்த தனது எஜமானருக்காக, தொடர்ந்து 3 மாத காலங்களாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் ஒரு நாயின் பாச போராட்டம் காண்போரை கலங்க வைத்துள்ளது.
7 வயதான அந்த நாய்குட்டியின் உரிமையாளர் சியாவ் பாவோ, இவர் பிப்ரவரி மாதம் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அந்த நாயும் அவருடனே கூட சென்றுள்ளது. இவருக்கு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ந்து 5 நாட்களிலேயே உயிரிழந்தார்.
இதனை அறியாத அந்த வளர்ப்பு நாய், சியாவ் பாவோ மட்டும் மீண்டும் வருவார் என்று அந்த மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், அந்த வளர்ப்பு நாய்க்கு உணவளித்து வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்ட போதிலும், அது மீண்டும் வந்து மருத்துவமனை வாசலில் காத்துக் கிடந்துள்ளது.
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…