Hamas Terrorist Abdallah (Age 18) [Image Source : X/@ShirionOrg]
இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது என் தந்தை ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நான் செய்தேன் என ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரையில், இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பு முழுதாக அழியும் வரையில் தாக்குதலை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் கூறி வருகிறது.
இப்படியான சூழலில், இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவரிடம் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய விசாரணையும், அதற்கு அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல் மீது ஹாமாஸ் நடத்திய தாக்குதல் நாளின் சூழ்நிலை மேலும் பதற்றத்தை உண்டாக்குகிறது.
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 18 வயது இளைஞர் அப்துல்லா, இஸ்ரேல் ராணுவத்தினரின் விசாரணையில் கூறுகையில், காசா எல்லைக்கு அருகில் உள்ள கிப்புட்ஸ் நிர் ஓஸ் பகுதியில் ஒரு வீட்டில் பெண் அழுகின்ற குரலை கேட்டோம். பின் அந்த பெண்ணைக் கண்டுபிடித்தோம் என கூறிய இளைஞர்,
” அவளுடைய ஆடைகளை கழற்றுமாறு நான் என் துப்பாக்கியால் அவளை மிரட்டினேன், அவள் ஜீன்ஸ் ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள் என்று எனக்கு நினைவில் உள்ளது. பின்னர் என் தந்தை அவளை பாலியல் பலாத்காரம் செய்தார். அடுத்து நான் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தேன். பின்னர் எனது உறவினர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். நாங்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு என் தந்தை அந்த பெண்ணை கொலை செய்தார்” என்று அப்துல்லா , இஸ்ரேல் புலனாய்வு அமைப்பிடம் கூறியுள்ளான். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…