ஹைதியில் ஒரே இரவில் 304 பேரின் உயிரை பறித்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

Published by
Edison

ஹைதியில் நேற்று இரவு ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால்,கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 304 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 304 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 1800 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும்  2000க்கும் அதிகமான நபர்கள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்,ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி அங்கு ஒரு மாத காலத்திற்கு பேரிடர் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைகளுக்கு விரைந்து உதவி வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹைட்டியின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் இறந்தவர்களின் எண்ணிக்கை 304 ஆக உள்ளதாகவும்,மேலும்,இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புபடையினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும்,ஹைதியில் உள்ள சிறிய அணைகள், நீர் தேக்கங்கள் உடைந்த காரணத்தால் கிராமங்களுக்குள் நீர் புகுந்துள்ளது.இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் ஹைதியில் உடனடி உதவி முயற்சிகளை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“ஹைதி மக்களுக்கு ஏற்கனவே புயல் எச்சரிக்கை உள்ள ஒரு சவாலான நேரத்தில், பேரழிவு தரும் பூகம்பத்தால் நான் வருத்தப்படுகிறேன்.சேதத்தை மதிப்பிடுவதற்கும் காயமடைந்தவர்களை மீட்பதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்கும் தனது நாடு தயாராக உள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர்,கடந்த 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison
Tags: Haiti

Recent Posts

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

எத்தனை சீட் …விளக்கம் கொடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…

2 minutes ago

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

10 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

10 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

11 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

11 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

13 hours ago