அமெரிக்காவில் 16 வது ஜனாதிபதியாக இருந்தவர் ஆபிரகாம் லிங்கன். வாஷிங்டனில் கடந்த 1865-ம் ஆண்டு ஒரு மேடை நாடகத்தை பார்த்து கொண்டு இருந்தபோது, நாடக கலைஞர் ஜான் வில்கேஸ் பூத் என்பவரால் ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். லிங்கனின் பிரேத பரிசோதனை பரிசோதனையின் போது சுமார் 2 அங்குல (5 சென்டிமீட்டர்) நீளமுள்ள தலைமுடி அகற்றப்பட்டது.
ஆபிரகாம் லிங்கனின் மனைவி மேரி டோட், லிங்கனின் உறவினருமான டாக்டர் லைமன் பீச்சர் டோட் என்பவருக்கு லிங்கனின் 5 சென்டிமீட்டர் நீளமுள்ள தலைமுடியை ரத்த உரை கொண்ட தபால் மூலம் லிங்கனின் நினைவாக கொடுத்தார். இதைத்தொடர்ந்து, லிங்கனின் முடியை லைமன் குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளனர்.
பாஸ்டன் நகரில் உள்ள ஒரு ஏல கம்பெனியில் சனிக்கிழமை முடிவடைந்த ஏலத்தில் லிங்கனின் முடியை 59 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. லிங்கனின் உடலை பரிசோதித்தபோது டாக்டர் டோட் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…