நடிகர் அக்ஷய் குமாரின் தயார் அருணா பாட்டியா உடல் நல குறைவால் காலமானார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் தாயாரும், தயாரிப்பாளருமான அருணா பாட்டியா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால், இங்கிலாந்தில் நடந்து வந்த சிண்ட்ரெல்லா படத்தின் படப்பிடிப்பில் இருந்த அக்ஷய் குமார், திங்கள்கிழமை காலை தனது தயாராயை பார்த்துக்கொள்வதற்காக மும்பை திரும்பினார். விரைவில் அருணா பாட்டியா குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அக்ஷய் குமார் தாயார் அருணா பாட்டியா காலமானார். இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து நடிகர் அக்ஷய் குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” என் அம்மா ஸ்ரீமதி அருணா பாட்டியா இன்று காலை அமைதியாக இந்த உலகத்தை விட்டு வெளியேறி, என் தந்தையுடன் வேறு உலகில் சேர்ந்தார். இந்தக் காலப்பகுதியில் நானும் எனது குடும்பத்தினரும் உங்கள் பிரார்த்தனைகளை மதிக்கிறேன்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…