நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக கணவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளிப்பதாகவும் , எனவே அம்பத்தூர் துணை ஆணையர் நேரில் விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்றும் ,கணவர் மற்றும் அவரது தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் தற்கொலைக்கு காரணம் என்று காவல்துறை தெரிவித்திருந்தது .
இந்த நிலையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சித்ரா மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்துள்ளார் . இந்த நிலையில் தற்போது ஹேமந்திடம் அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் சென்று விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…