ஊர்க்காவல் படையினரை காவல்துறையில் சேர்க்குமாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ஊர்க்காவல் படையினரை காவல்துறையில் சேர்ப்பதன் மூலம் காவல்துறையினரின் பணிச்சுமை குறையும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், மக்களை காக்கும் பணியில், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வெளியில் இறங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ், ஊர்க்காவல் படையினரை தகுதியின்படி காவல் துறையில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கை செயல்படுத்தும் பணியில் ஈடுபடும் அவர்களுக்கு எந்தவித நோய்த்தடுப்பு வசதியும், ஆயுள் காப்பீடும் செய்து தரப்படாதது வருத்தம் அளிப்பதாகவும், ஊர்க்காவல் படையினரை காவல்துறையில் சேர்ப்பதன் மூலம் காவல்துறையினரின் பணிச்சுமை குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025