அஜித்தின் வெற்றிப்படமான வீரம் படம் ஹிந்தியில் ரீ மேக் ஆகவுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அஜித் நடித்த விநாயகம் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் சல்மான் கான் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீ மேக் கதையை கேட்டிருந்தார். அதன் பிறகு ஹிந்திக்கு ஏற்றவாறு கதையில் சில மாற்றங்களை செய்தனர், அது சரியாக வரவில்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…