ரூ.32 கோடி செலவில் காதலரின் வீட்டருகே புதுவீடு வாங்கிய ஆலியா பட்.!

நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.இவரும் ,பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் .இவர் மறைந்த ரிஷிகபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ஆலியா பட் காதலருடன் நேரத்தை செலவிட அவரது வீட்டின் அருகிலே வீடு ஒன்றை வாங்கியுள்ளார் .மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.32 கோடி செலவில் வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம் .அவர் வாங்கியுள்ள வீடு அந்த அந்த குடியிருப்பின் 5-வது மாடியில் உள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் ரன்பீர் கபூர் வசிப்பது அதே குடியிருப்பின் 7-வது மாடியாம் .காதலருக்காக ரூ.32 கோடி செலவு செய்து ஆலியா பட் வீடு வாங்கியுள்ளது சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025