நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை தொடர்ந்து வீட்டில் தனிமை படுத்தி கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” கடந்த வாரம் நான் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. என்னைப் பார்த்துக் கொண்ட எனது நண்பர்களுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி. நான் சமூக ஊடகங்களிலிருந்து இடைவேளை எடுத்துக் கொண்டேன். தொற்று ஒரு காரணம், இன்னொரு காரணம் நமது தேசம் இவ்வளவு மோசமான கொரோனா நெருக்கடியைச் சந்திக்கும் போது என்னப் பதிவிட வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. எப்போதும் போல, எனக்கு என்னப் பேசுவது என்று தெரியாத சமயங்களில் நான் என் மனமார பாடுவேன். அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிடும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்து போகும். இந்த தொற்று காலம் முடிந்து நாம் மீண்டும் சந்திப்போம். என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியா விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றார்கள்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…