சிறுத்தை சிவாவுக்கு உடனடியாக படப்பிடிப்பை தொடங்க உத்தரவிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். மேலும் நகைச்சுவை வேடங்களில் சூரி மற்றும் சதீஷ் நடிக்கவுள்ளனர்.டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் ரஜினி படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு படக்குழுவினர் பொய் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் 50% படப்பிடிப்புகள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ரஜினியின் உடல்நிலை கருதி படத்தை பிறகு எடுத்துக் கொள்ளலாம் என முதலில் நினைத்தனர். ஆனால் தற்போது சிறுத்தை சிவாவுக்கு உடனடியாக படப்பிடிப்பை தொடங்க உத்தரவிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினி இல்லாத காட்சிகளை உடனடியாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…