வேலை கிடைக்காத விரக்தி.. 3 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கா பேராசிரியர்.! லாஸ் வேகாஸ் உண்மைகள்….

Published by
மணிகண்டன்

கடந்த டிசம்பர் 6 புதன் கிழமை அன்று, அமெரிக்கா, கலிபோர்னியாவில், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள UNLV  பல்கலைக்கழக வளாகத்தில் பிசினஸ் கல்லூரியில் ஒரு மர்ம நபர் துப்ப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூடு பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட கலிபோர்னியா காவல்துறையினர் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில்,துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததில் இருவர் வணிக பேராசிரியர்கள். அவர்கள்,  பாட்ரிசியா நவரோ வெலஸ் மற்றும் ஜான் ஜெர்ரி சாங் ஆகியோர் ஆவார். மூன்றாவது நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. உறவினர்கள் யாரும் வராததால் இன்னும் நிலுவையில் உள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

இந்த துப்பாக்கி சூட்டில், 38 வயதான ஒரு பேராசிரியரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அடுத்து UNLV பல்கலைக்கழக வளாகம் வெள்ளிக்கிழமை வரை மூடப்பட்டிருந்தது. நாளை (டிசம்பர் 10) வரை வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டனர். அதில், குற்றவாளி பெயர் அந்தோனி ஜேம்ஸ் பொலிட்டோ என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்,  2001 முதல் 2017 வரை  வட கரோலினாவில் உள்ள கிழக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு, அக்டோபர் 2018 முதல் ஜூன் 2022 வரை கிளார்க் கவுண்டி ஷெரிஃப் கெவின் மெக்மஹில்,துணை பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். ஓப்பந்தம் முடிந்ததும் அவர் வேலையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளார் . அதன் பிறகு,  பொலிடோ , நெவாடாவில் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பல வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளார், ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள பல்வேறு ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொடர்ந்து வேலை கிடைக்காத விரக்தியில் துப்பாக்கியுடன் UNLV  பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து பேராசிரியாயர்களை குறிவைத்து சுட்டுள்ளார் . சுமார் 15 நிமிடங்கள் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது வீட்டை ஆய்வு செய்த போது அதிக கடனில் அந்தோனி ஜேம்ஸ் பொலிட்டோ இருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம் மேலும் சில பல்கலைக்கழக பேராசிரியர்களின் லிஸ்ட் இருந்துள்ளது . நல்ல வேலையாக அவர் உயிரிழந்ததால் அடுத்தடுத்த தாக்குதல் நடைபெறாமல் போனது.

மேலும் அவர் மீது, 1992 ஆம் ஆண்டு வர்ஜீனியாவில் கணினி ஹேக்கிங் தொடர்பான குற்றப் பதிவு மட்டுமே இருந்துள்ளது. ஆனால் வன்முறை தொடர்பான எந்த வழக்குகளோ அல்லது அடையாளமோ எதுவும் இல்லை என்று விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

13 minutes ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

1 hour ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

2 hours ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago