தளபதி-65 படத்தில் ஹீரோயின் மற்றும் வில்லனாக நடிப்பது பாலிவுட் பிரபலங்களா.?

தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி-65 படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது தளபதி விஜய்யின் 65-வது படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் , வில்லனாக பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025