முட்டைக்கோஸ் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal
  • உணவே மருந்து என்பது போல நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் தான் நமது உடலுக்கு தேவையான சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திகளும் அடங்கியுள்ளது.
  • குறிப்பாக முட்டைகோஸ் வேகவைத்த நீரில் ஏராளமான நன்மைகள் அடங்கி இருக்கிறது, அவற்றை பற்றி அறியலாம் வாருங்கள்.

நாம் அடிக்கடி நமது உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய முட்டைகோஸில்  எண்ணற்ற நன்மைகள் அடங்கி இருக்கிறது. இருப்பினும் இந்த முட்டைக்கோஸை  சாதாரணமாக நாம் உணவுடன் சாப்பிடுவதை விட, முட்டைகோஸை வேகவைத்து அதின் நீரை எடுத்து உட்கொள்ளுவதால் மிக அதிக அளவில் நன்மைகள் கிடைக்கிறது. அவற்றை குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எடை குறைப்பு

பலர் தற்போதைய கால கட்டத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகாக தெரிய வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் ஸ்லிம்மாக தெரியவேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடங்களுக்கு பணத்தை கொடுத்தும், விலை அதிகம் உள்ள சில மருந்துப் பொருட்களை உட்கொள்வதாலும் பலர் உடல் எடையை குறைத்து விடலாம் என நினைக்கின்றனர்.

சிலருக்கு அதன் மூலம் நன்மைகள் கிடைத்திருந்தாலும், பலருக்கு இதன் மூலம் பயன் கிடைப்பதில்லை. இருப்பினும் இந்த முட்டைகோஸ் சூப் அல்லது ஜூஸ் போல செய்து குடிக்கும் பொழுது உடல் உறுப்புகளில் உள்ள கலோரிகளை குறைப்பதால் விரைவில் நமது உடல் எடையை நாம் குறைக்க முடியும்.

வயிற்றுப்புண்

நேரம் தவறி சாப்பிடுவது அல்லது மூன்று வேளையும் தொடர்ந்து சாப்பிடாமல் இருப்பதன் காரணமாக உடலில் அல்சர் அதாவது வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்த வயிற்றுப் புண் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் சம்பந்தப்பட்ட வியாதியும், வெளி உறுப்புகளில் சில வியாதிகளும் ஏற்படுகிறது. இந்த அல்சரை குணப்படுத்துவதற்கு முட்டைகோஸை வேகவைத்து நீர் குடிப்பது மிகவும் உதவுகிறது.

கன் பிரச்சனை

கண்புரை என்று அழைக்கப்படக்கூடிய கண் தொடர்பான பிரச்சனையை குணப்படுத்துவதற்கும் இந்த முட்டைக்கோஸ் வேக வைத்த நீர் உதவுகிறது. கண் புரை எனப்படும் கேட்ராக்ட் நோய் வராமல் தவிர்க்க வேண்டும் என நினைப்பவர்களும் இந்த முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரைக் குடிக்கலாம்.

புற்றுநோய்

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. புற்றுநோயில் இருந்து குணம் அடைய விரும்புபவர்கள் அல்லது புற்றுநோய் வராமல் தவிர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் இந்த முட்டைக்கோஸ் வேக வைத்த நீரை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய ஐசோசியனேட் நுரையீரல் மற்றும் வயிறு போன்றவற்றில் புற்றுநோய் உருவாவதை தடுத்து உடலில் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

தற்பொழுது உலகில் வாழக்கூடிய அனைத்து மனிதர்களுக்குமே மிக அவசியமான ஒன்றாக நோய் எதிர்ப்பு சக்தி தான் தேவை. அதிகளவில் தற்பொழுது பரவக்கூடிய வைரஸ் கிருமிகளை அழிக்கும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் வாழ வேண்டுமானால் நாம் வாழவேண்டுமானால் அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அவ்வாறு இந்த முட்டைக் கோஸ் சாற்றில் இருக்கக்கூடிய ஹிஸ்டிடின் எனும் சத்து உடலில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

Published by
Rebekal

Recent Posts

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

12 minutes ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

38 minutes ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

1 hour ago

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

9 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

10 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

11 hours ago