ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் விஷாலின் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவர்களின் மகளான ஐஸ்வர்யா அர்ஜூன். கடைசியாக இவர் அர்ஜூன் இயக்கத்தில் உருவான ‘சொல்லி விடவா’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, சமீபத்தில் நான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. எனவே தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு ஒரு மருத்துவ குழுவினரின் வழிநடத்துதலின் படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள், தயவு செய்து கவனமாக இருங்கள் என்றும், அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்,தயவு செய்து முகமூடியை அணியுங்கள், அதிக ஆரோக்கியத்துடன் விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் அர்ஜுன் அவர்களின் மருமகனும், நடிகருமான துருவ் சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…