நடிகர் தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களை அடுத்து அசுரன் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தனுஷ் – வெற்றிமாறன் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் பொல்லாதவன் ஆடுகளம் படங்களை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும், பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. ஆதலால், இப்பாடலை கானா மியூசிக் (gaana) நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்திலிருந்து நேற்று இரண்டு போஸ்டர்கள் வெளியாகின. இதில் நடிகர் தனுஷ் அந்த காலத்து இளைஞர்கள் போல மீசை வைத்து வேறொரு தோற்றத்தில் உள்ளார். இன்னொரு போஸ்டரில் ஆக்ரோஷமாக உள்ளார். இந்த போஸ்டர்கள் வெளியாகி தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது. இப்படமானது ,அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…