சிவகார்த்திகேயன் நடித்து அயலான் படத்தில் இடம்பெற்ற வேற லெவல் சகோ என்ற பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படம் மார்ச் மாதம் 26ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அயலான் படத்தினை ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்தி கேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங்,யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஷா கோபிகர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து டி.முத்துராஜ் இசையமைக்கிறார் . பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 2500 கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து நாளை சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள வேற லெவல் சகோ என்ற பாடல் காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…