18 ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது பிதாமகன் படத்தை தொடர்ந்து 18 ஆண்டுகள் கழித்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஜீலை 23-ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…