பிக்பாஸில் ஜோடியாக செங்கல்லை நகர்த்தி ஒருவரும் ,மற்றொருவர் அதன் மீது நடந்து இலக்கை அடையும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .
பிக்பாஸ் வீடானது இந்த வாரம் தீபாவளி பண்டிகைக்காக களைக்கட்டி வருகிறது . வித்தியாசமான டாஸ்குகளை கொடுக்க போட்டியாளர்கள் சண்டை , சச்சரவுகளை ஏற்படுத்தினாலும் உற்சாகமாக ஒவ்வொரு டாஸ்கையும் செய்து வருகின்றனர் .
அந்த வகையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் வேடிக்கையான டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளார் . ஜோடியாக நடக்கவிருக்கும் இந்த டாஸ்கில் கொடுக்கப்பட்ட தூரத்தை செங்கலின் மேல் ஒருவர் நடக்க மற்றொருவர் செங்கலை நகர்த்தி உதவி செய்ய வேண்டும் . எந்த ஜோடி குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடக்குகிறார்களோ அந்த ஜோடியே இந்த டாஸ்க்கின் வெற்றியாளர் .
இந்த டாஸ்கில் ரமேஷ்-சுசித்ரா, சோம் – ரம்யா, ரியோ-நிஷா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா ஆகியோர் ஜோடியாக விளையாடுகின்றனர். சற்று சுவாரசியமாகவும் , உற்சாகமாகவும் இந்த டாஸ்க் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதிலும் ஏதாவது சண்டையை இழுத்து விடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…