பொதுவாகவே மக்கள் தங்களது பொழுதுபோக்காக வைத்திருப்பது திரைப்படங்களைப் பார்ப்பது தான். தற்போதுள்ள வளர்ச்சியின் காரணமாக வெளிநாடுகளில் உருவாகிற திரைப்படங்களை கூட நமது தொலைபேசியிலேயே கண்டு விடலாம். ஆனால் வட கொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவை பொருத்தவரையில் அந்நாட்டு அரசு பல்வேறு வித்தியாசமான சட்டங்களை இயற்றி வருகிறது. வட கொரிய மக்கள் சீன எல்லை வழியாக கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக தான் வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டு படங்களை காண்பதால் மக்களிடம் அதன் தாக்கம் அதிகரித்து, அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்குவார் என்று அந்நாட்டு அரசு அஞ்சுகிறது.
எனவே வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது வடகொரிய அரசு. இதன்படி தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், வெளிநாட்டு படங்களைக் காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கிம் ஜாங் உன் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…