சந்திரமுகி இரண்டாம் பக்கத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார்.
அதில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல் பாகத்தில் கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருந்தார்.
அதைபோல் இந்த இரண்டாம் பாகத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…