கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் முக கவசம் அவசியம் இல்லை, சமூக இடைவெளி அவசியம் இல்லை என கூறுவது சரியல்ல என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு குணமடைந்தது.இதனால் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அப்பொழுது அவர், தான் அணிந்திருந்த முகக்கவசத்தை கழற்றி, தனது ஆதவர்களிடையே கையசைத்தார்.மக்கள் அனைவரும் கொரோனா வைரஸைக் கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள் என்று கூறினார் .மேலும் முகக்கவசத்தை கழற்றிய அதிபர் டிரம்பின் செயல், தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
இதனிடையே அமெரிக்காவில் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.அதேபோல் ஜோ பைடனும் டிரம்பை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் டிரம்ப் குறித்து ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் முக கவசம் அவசியம் இல்லை, சமூக இடைவெளி அவசியம் இல்லை என கூறுவது சரியல்ல.எனவே டிரம்ப் மக்களுக்கு, கொரோனா தொடர்பான சரியான பாடத்தை எடுக்க வேண்டும் என்றும் கொரோனா குறித்து தவறாக டிரம்ப் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…