ஆரி நடிப்பில் உருவாகி வரும் பகவான் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பானது இன்று முதல் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகர் ஆரி.பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தான் டைட்டில் வின்னரும் கூட . ஏற்கனவே ’எல்லாம் மேல் இருக்குறவன் பாத்துக்குவான்’, ‘அலேகா’, ‘பகவான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸூக்கு பின் வித்யா பிரதீப்புக்கு ஜோடியாக ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆரி தனது பகவான் படத்தினை குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படமான பகவான் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று முதல் திருவண்ணாமலை அருகிலுள்ள செஞ்சி கோட்டையில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனத்தை காளிங்கன் எழுதி இயக்க, முருகன் சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும் இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில்அறிமுகமாகிறார்.ஏற்கனவே இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லி கணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…