அந்தகன் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிக் பாஸ் வனிதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா ,தபு , ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் “அந்தாதூன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது .
மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்த படமானது ‘அந்தகன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்காக உள்ளது . பிரசாந்த் நடிக்கும் இந்தப் படத்தினை அவரது தந்தையான தியாகராஜன் இயக்கி தயாரிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக், பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா,கேஎஸ் ரவிகுமார், பிக் பாஸ் வனிதா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் நடிகை வனிதா நடிகர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை வனிதா தற்போது பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று…
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின்…
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள்…
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…