உங்கள் முன் என் சாவு- சாவதற்குள் உங்களை பார்க்கணும்..! 20 ஆண்டுகால காத்திருப்பு ஆசை…கட்டித் தழுவி நெகிழ வைத்த விஜய்!

Published by
kavitha
  • நான் சாவதற்க்குள் உங்களை சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்று விஜய் ரசிகர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உருக்கமான பதிவு
  • பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினரின் 20 ஆண்டுகால ஆசை இதுவாகும்..தனது ரசிகரின் ஆசையை நடிகர் விஜய் பூர்த்தி செய்து உள்ளார்.

 

நடிகர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ரசிகர் உள்ளனர்.அவர்கள் அனைவரும் அவரை அண்ணா என்று அழைப்பதும் விஜய் என் நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்..ஹ..ஹ என்பதும் உணர்வு ரீதியிலான ஒரு நிகழ்வாக விஜய் ரசிகர்கள் பார்க்கின்றனர்.மேலும் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஏராளமான நலத்திட்டங்களை விஜய் ரசிகர்கள் மக்களுக்கு ஆபத்து மற்றும் அத்தியவசியமான காலத்தில் களமிரங்கியதை யாரும் மறக்க முடியாது அவ்வாறு தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்டங்களை செய்து வருகிறார்.இந்நிலையில் தான் சமீபத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரசிகர்   நான் சாவதற்குள் உங்களைப் பார்த்து சந்திக்க ஆசைப்படுகிறேன். உங்களுக்கு முன்பாகவே நாங்கள் இருவரும் இறந்துவிட வேண்டும். நீங்கள் இல்லாத இந்த உலகத்தில் நாங்களும் இருக்க விரும்பவில்லை என்று நிகழ்ச்சியில் கண்ணீரை தாரைத்தாரை கொட்டியவாறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல்  கொட்டித் தீர்த்தார்.

ரசிகர் இவ்வாறு தொலைக்காட்சியில் பேசியதைப் பார்த்த நடிகர் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ் உடனே தம்பதிகளை விஜயை பார்க்க ஏற்பாடு செய்தார்.சந்திப்பு உரிய நேரத்தில் நடந்தது.அந்த சந்திப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியினர் விஜய்யை நேரில் சந்தித்தனர். கிட்டத்தட்ட சுமார் அரைமணி நேரம் இச்சந்திப்பு  நடைபெற்றுள்ளது. அப்போது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதியிடம் நடிகர் விஜய் என்னைச் சந்திக்க வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்த விஷ்யம் எனக்கு வந்து சேரவில்லை. சுமார் 20 வருடமாக நீங்கள் என்னைப் பார்க்க முயற்சித்து இருக்கிறீர்கள் உங்களை நான் சந்திக்கவில்லை என்பது எனக்கு தான் மிகவும் அசிங்கமாக உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நீங்கள் பெரிய வார்த்தை எல்லாம் பேசி இருக்கிறீர்கள்.அது  மிக உணர்வுப்பூர்வம் ஆக எனக்கு இருந்தது என்று பேசியுள்ளார்.

இவ்வாறு விஜய் உடனான சந்திப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குமார் நடிகர் விஜயின் திருப்பாச்சி பட வசனத்தை அவரிடம் பேசிக் காட்டியுள்ளார். அதனைக்கேட்டு என்னைக் கட்டித் தழுவினார்  விஜய் என்று தெரிவித்தார்.சில உணர்வு பூர்வமான அன்பை பெறுவது கடினம் அவ்வாறு கிடைப்பதும் வாழ்வில் மிகவும் அரிது அதனையும் உதாசினப்படுத்தும் மாந்தர்களின் மந்தைக் கூட்டமாக தான் இந்த மாபெரும் உலகம் உருண்டு கொண்டிருக்கிறது.நேசம் பாசம் நிறைந்த வாசம் உடையது.அவ்வாறு தான் இந்த தம்பதிகளின் நேசம்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago