உலகம் முழுவதும் 30,04,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, சீனாவாக இருந்தாலும் கொரோனாவின் தாக்கம் சீனாவை விட தற்போது ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவிலும் அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதும் 30,04,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207,118 ஆக உள்ளது. இதில் ஆறுதல் தரும் செய்தியாக 882,772 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தனது முகத்தை அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் 987,322 பேரும், ஸ்பெயினில் 226,629 பேரும் , இத்தாலியில் 197,675 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…