உக்ரைனில் மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா, கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கிழக்கு பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. அதே சமயத்தில் ரஷ்ய நட்பு நாடான பெலாரசில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது, மனிதாபிமான மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து உக்ரைனில் உள்ள இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதன்படி, இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியளவில் இருந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்நோவாக்கா நகரங்ககளில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் மீது இன்று 10வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வந்த நிலையில், அந்நாட்டு உள்ளூர் நேரப்படி, காலை 6 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…