#BREAKING: மூன்று நாடுகளின் தூதரகங்களை மூடும் இலங்கை!

நார்வே, ஆஸ்திரேலியா, ஈராக் நாடுகளில் உள்ள தங்கள் தோத்திரகங்களை மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு என தகவல்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் நாளை, நாளை மறுநாள் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், நார்வே, ஆஸ்திரேலியா, ஈராக் நாடுகளில் ஏப்ரல் 30 முதல் தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி, ஈராக்கின் பாக்தாத் ஆகிய நகரங்களில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி சிக்கன நடவடிக்கையாக மூன்று நாடுகளின் தூதரகங்களை மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025